Wednesday, February 29, 2012

பணி ஓய்வு கவிதை...







உங்களை வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் வாழ்த்துகிறேன்...


வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும்
நம் தலைமுறை...


தந்தையைப் பிரிந்தால் அது கரு!

நிஜத்தை பிரிந்தால் அது நிழல்,

மண்ணில் விதைத்தால் அது வீரம்!

இரவைப் பிரிந்த பொழுதுதான் காலை,

இமைகள் பிரிந்தால்தான் பார்வை,

உழைத்துக் களைத்தால்தான் வேர்வை!

நாங்கள் வேண்டுவதோ உங்கள் உறவை!

விண்ணைப் பிரிந்தால் மழைத்தண்ணீர்,

உங்களைப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்!

நாங்கள் பிறந்தது வேறுவேறு தாய்க்கு,

ஆயினும் பிள்ளைகள்
இந்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
எனும் தாய்க்கு!

 நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
நாங்கள் உங்களிடம் எதிர்பார்பது....
நாங்கள் உங்களிடம் எதிர்பார்பது.....

 என்றும் உங்கள் ஆசீர்வாதம் மட்டுமே…

Sunday, February 26, 2012

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பொன்னாவரை பூ...




ன்று நீரிழிவு நோயின் பாதிப்பு இல்லாதவர்களை நாம்  விரல் விட்டு எண்ணிவிடலாம்.  40 வயதைக் கடந்தவர்கள் முக்கால் வாசிப் பேர் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களாக உள்ளனர்.


நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் அதாவது இன்சுலின் சுரக்கிறது.  அவ்வாறு கணைய நீர் சீராக சுரந்து சக்தியாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலப்பதால்  இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.  இதனால் சர்க்கரை நோய் உருவாகிறது.

மேலும் உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம், உடலுக்கு சீரான சத்துக்களைக் கொண்ட உணவு இல்லாமை, பரம்பரையாக வரும் நீரிழிவு போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

இந்த நீரிழிவு நோயின் தன்மை வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு பாதிப்பை உண்டு பண்ணும்.

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்கிறது  நவீன மருத்துவ உலகம் .  ஆனால் முறையான உணவு முறையாலும், உடற் பயிற்சியாலும்  நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்கிறது  இந்திய முறை மருத்துவம்.

நீரிழிவு நோய்க்கு சிலர் மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர்.  இதற்கு மேல் சிலர் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கின்றனர்.  இதுதான் வாழ்வின் இறுதி என நினைத்து சிலர் மாத்திரையின் எண்ணிக்கையை கூட்டியும், ஊசியின் மி.லி. அளவைக் கூட்டியும் பயன்படுத்துகின்றனர்.

சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும்,  அந்த நோயினால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.  பொதுவாக  சர்க்கரை நோயின் பாதிப்பானது மயக்கம், உடல் தளர்வு, கை கால் சோர்வு, ஞாபக மறதி, கண் பார்வைக் குறைபாடு என பல குறிகுணங்கள் இருந்தால், இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து, ஆரம்ப காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, தியானம், உடற் பயிற்சி, போன்றவற்றால் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோயை சித்தர்கள் மதுமேக நோய் என குறிப்பிடுகின்றனர்.  இதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பல மூலிகை மருந்துகளையும் கூறியுள்ளனர்.  அவற்றில், பொன்னாவாரை பூ என்ற ஆவாரம்பூ மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பொன்னாவரை பூ பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி.  
  இதன் இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. 

பொன்னாவாரைப் பூவை தங்கப் பூ என்றும் அழைப்பார்கள். காரணம், இதில் மேனியைப் பொன்னாக்கும் தங்கச்சத்து மிகுந்துள்ளது. தங்கம் எனவே சடத்திற்குக் காந்திதரும்
மங்காத நீரை வறட்சிகளை-அங்கத்தாம் மாவைக்கற் றாழை மணத்தை அகற்றிவிடும்
பூவைச்சேர் ஆவாரம் பூ 

    -அகத்தியர் குணவாகடம்

பொருள் - நீரிழிவு, வறட்சி, உடலின் வியர்வை நாற்றம் இவற்றைப் போக்கும்.  உடலுக்கு பொற்சாயலைக் கொடுக்கும்.  

சர்க்கரை நோயாளிகளுக்கு பொன்னாவாரைப் பூ மிகுந்த பலனளிக்கக்கூடிய பூவாகும்.

பொன்னாவாரை பூ    - 10 கிராம்

மிளகு        - 5

திப்பிலி        - 3

சுக்கு            - 1 துண்டு

சிற்றரத்தை        - 1 துண்டு

இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.

பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும்.

பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும்.

உடல் எரிச்சல் தீரும்.  

பொன்னாவாரைப் பூவை உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு டீ.. காஃபிக்கு பதிலாக இதனை கஷாயம் செய்து பனங்கற்கண்டு கலந்து அருந்தலாம்.

பொன்னாவாவாரம் பூ  ஆயுளை மட்டுமல்ல, அழகையும் காக்க வல்லது.

Thursday, February 23, 2012

ஈ.சி.ஜி.பரிசோதனை தேவையா?



.சி.ஜி.பரிசோதனை தேவையா?















`
நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறினாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறிய பின்தான் தொடர்ந்து ஏற முடிகிறது. பாரம் தூக்கிக்கொண்டு நடக்கவே முடியுதில்லை' என்றாள் அவள்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ்ரோல், .சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்' என்றேன்.

'
.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்' என்றாள் கோபமாக. `ஏன்?' என்று கேட்டேன்.

`
.சி.ஜி செய்வதில் பிரயோசனமில்லை' என்றவளது குரல் திடீரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந்தது. `எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் சும்மா `செக்அப்' எண்டு .சி.ஜி செய்து பார்த்தவர். ஒண்டும் இல்லை எண்டிட்டாங்கள். மற்ற நாள் திடீரெண்டு ஹாட் அட்டாக்கிலை போட்டார். உந்த .சி.ஜி பிரயோசனம் இல்லாத வேலை' என்றாள்.

இன்னொரு வயதான மாது. `சரியான களயாகக் கிடக்கு, தலையையும் சுத்துது' என்றாள். பரிசோதித்துப் பார்த்தபோது உடல் வியர்த்து, பிரஸர் தளர்ந்திருந்தது. மாரடைப்பு என்பதாக உணர்ந்தேன்.

'
.சி.ஜி எடுத்துப்பார்க்க வேண்டும்' என்றேன்.

`
நெஞ்சு வலி இல்லைத்தானே, ஏன் வீணாக .சி.ஜி' என்றாள். கூட வந்தவரும் அதையே வலியுறுத்தினார்.

இவர்களுக்கு மாறாக இருதய நோய்களோடு எந்தவித தொடர்புமற்ற சிலர் .சி.ஜி எடுத்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.

இவர்கள் அனைவரும் .சி.ஜி.யின் பயன்பாடு பற்றிய தெளிவு இல்லாமையால் தான் தவறான முடிவுகளுக்கு வந்தார்கள். முதலாமவர் முதல் நாள் .சி.ஜி எடுத்தபோதும் அடுத்தநாள் இறந்தது .சி.ஜி.யின் தவறு அல்ல. வரப் போகிற மாரடைப்பை முதலிலேயே கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுவதல்ல வழமையான .சி.ஜி.ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், ஏற்கனவே இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைக் காட்டும்.

பயிற்சி .சி.ஜி. ( Excercise ECG), அன்ஜியோகிராம் ( Angiogram) போன்ற பரிசோதனைகள் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தும். எனவே எடுத்த .சி.ஜி.யில் எந்த மாற்றமும் இல்லை, சாதாரணமானது என்ற போதும் அஞ்சைனா, மாரடைப்பு ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக்கூடிய இருதயநாடி நோய்கள் ( Coronary Artery Disease) இல்லையென முடிவுகட்ட முடியாது. ஆனால் .சி.ஜி.யில் மாற்றமிருப்பது நோயிருப்பதை உறுதி செய்யும்.

இரண்டாமவர் நெஞ்சுவலி இல்லையென்பதால் .சி.ஜி வேண்டாம் என்றார். ஆனால் நெஞ்சுவலி இல்லாமல் கூட மாரடைப்பு வருவதுண்டு. வேண்டாம் என்ற அவருக்கு மாரடைப்பு வந்திருந்ததை .சி.ஜி. தெளிவுபடுத்தியது.

எனவே .சி.ஜி. தேவையா இல்லையா என்பதை ஒருவருக்கு உள்ள அறிகுறிகளைக் கொண்டு வைத்தியரே தீர்மானிக்க வேண்டும். இருந்தபோதும் .சி.ஜி. மட்டுமே மாரடைப்பைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. Troponins T போன்ற சில இரத்த பரிசோதனைகள் .சி.ஜி.யை விட விரைவாகவே மாரடைப்பை கண்டு பிடிக்க உதவுகிறது.

ஆனால் .சி.ஜி. என்பது வெறுமனே மாரடைப்பைக் கண்டு பிடிப்பதற்கான பரிசோதனை அல்ல. இருதயத்தோடு சம்பந்தப்பட்ட பல நோய்களை வைத்தியர்களுக்குச் சுட்டிக்காட்ட அது உதவுகிறது. இருதயத் துடிப்பின் வேகம், அதன் ஒழுங்கு, இருதய துடிப்பின் சீரின்மை, அதன் தசைகளின் வீக்கம், இருதய வால்வுகளின் நோய்கள் போன்ற பலவற்றை இனங்காண உதவுகிறது. டிஜொக்சின் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளைக்கூட .சி.ஜி மூலம் அறியலாம்.

இரத்தப் பரிசோதனைகள் போல வழமையாகச் செய்யப்படும் ஒரு சாதாரண உடல்நலப் பரிசோதனையே இதுவாகும். .சி.ஜி என்பது எந்தவித பாதிப்பும் அற்ற இலகுவான பரி சோதனையாகும். இதன்போது மின்சாரம் உடலுக்குள் பாய்ச்சப்படுவதில்லை. மாறாக இருதயத்திலிருந்து இயல்பாக எழும் மின் தூண்டுதலையே அது அளவிடுகிறது.

ஐந்தோவன் Einthoven என்பவரால் இது 1893 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக அவர் 1924 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.




நன்றி.டொக்டர்.எம்.கே.முருகானந்தன்