Friday, April 27, 2012

இளவயது மரணத்திற்கு காரணமாகும் மாட்டிறைச்சி








ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும்
என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.

பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின்(Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.

இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது
1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த 
ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப் பட்டனர்.

நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே 
இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.

இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட் ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் 
வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக 
உலர் பருப்பு, மீன் போன்றவை களை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.

எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்
கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Wednesday, April 18, 2012

பனைமரம் வளர்ப்போம்-மனிதர்களை காப்போம்...


பனை மரம்:




தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்

இந்தப் பழமொழியைக் கூறியேநம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் உண்மை என்னவெனில் தென்னையை விதைப்பவன் நிறைய தேங்காய் கலந்த உணவுப் பொருட்களைத் தின்றுவிட்டு உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிச் சாவான்பனையை விதைப்பவனோஅதனுடைய நற்பலனால் தன்னுடைய சந்ததியர் வளமாக வாழ்வதை பார்த்துவிட்டு சாவான் என்பதே உண்மை. 

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம்இதை வற்றாத புதையல் என்றே கூறலாம்பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை கற்பத்தரு என போற்றினர்மகாராஷ்டிரா பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர்டாக்டர்மகாபல் என்பவர் பனைமர பாறைகளை (Fossiles) ஆராய்ந்து பனைமரங்கள் எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும் என்று நிருபிக்கிறார்.பனைஒரு மரம் என்று பொதுவாக தமிழில்வழங்கப்படினும்தொல்காப்பியத்தில்குறித்துள்ளபடியும்இன்றைய தாவரவியல்அடிப்படையில் குறித்துள்ளபடியும் புல்லினத்தைச்சேர்ந்த ஒரு தாவரமாகும்இதன் தாவரவியற் பெயர்பொராசஸ் பிலபெலிபேரா (Borassus flabelliferaஎன்பதாகும்.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை,இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறதுஅதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியதுபனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவைகிளைகளும் கிடையாஇதன் உச்சியில்,கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள்வட்டமாக அமைந்திருக்கும்இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை.

பனை மரங்கள் 45டிகிரி வட அச்சரேகையிலிருந்து 45டிகிரி தென் அச்சரேகை வரையிலுள்ள வெப்பமண்டல பிரதேசங்களில் வளர்கிறதுஇப்பிரதேசத்தை பனை வட்டம் (Palm Belt) என அழைக்கப்படுகிறது.இப்பிரதேசத்தில் அடங்கிய இந்தியா: 60 மில்லியன்,மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன்இலங்கை - 11.1மில்லியன்இந்தோனெசியா - 10 மில்லியன்மடகஸ்கார் - 10 மில்லியன்மியன்மார் - 2.3 மில்லியன்கம்பூச்சியா - 2மில்லியன்தாய்லாந்து - 2 மில்லியன் என உலக அளவில் மொத்தளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதுஇவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் நாட்டில்கன்னியாகுமரி தொடக்கம்,திருநெல்வேலிமதுரை போன்ற இடங்கள் உட்படச்சென்னை வரை பனைகள் காணப்படுகின்றனமேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்,
பனை மரத்தின் பயன்கள்
"திணைத்துணை நன்றி செயினும் பனைத் துணையாக்
கொள்வார் பயன்தெரி வார்" - திருக்குறள்
என்ற நன்றியின் பயனோடு பனையின் பயனை ஒப்பிட்டு வள்ளூவர் கூறியதிலிருந்தே பனையின் மேம்பட்ட சிறப்பு தன்மை விளங்குகிறது.
இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும்இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள்இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும்,முளைவிட ஆரம்பித்ததிலிருந்துவெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப்,பனைகளுக்குப் பயன் உண்டுஇதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள்கற்பகத்தருஎன்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்றஇந்துப் புராணக்கதைகளில்குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும்.பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவுபதனீர் - 180 லிட்டர்பனை வெல்லம் - 25 கிபனஞ்சீனி - 16 கிதும்பு - 11.4 கிஈக்கு - 2.25 கிவிறகு - 10 கிஓலை - 10 கிநார் - 20 கி.
பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும்,உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றனமுற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தனஇன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம்இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள்கைப்பணிப் பொருட்கள்மற்றும் தும்புநார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும்பொதுவாகஇது வளரும் இடங்களிலெல்லாம்வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயரஅடித்தளமாக விளங்குகிறது.
பனைத்தொழில் அன்றும் இன்றும்:

இந்தியாவில் இனிப்பின் தேவை மிகவும் அவசியமானது.பல பண்டிகைகளிலும் இனிப்பு வழக்கப்ப்டுவது வாடிக்கை.முன்பு கரும்பு வெள்ளம்தென்னைபனை கருப்பட்டி,முதலியவை இனிப்பிற்காக உபயோகபடுதப்பட்டது.தென்னிந்தியாவில் பெரும்பாமையான மக்கள் பனை வெல்லத்தையெ பயன்படுத்தினார்அக்காலகட்டத்தில் பனையேறிகளின் வாழ்க்கை மிக செழிப்பாக இருந்தது.குறிப்பாக சொல்வதென்றால் 200 வருடங்களுக்கு முன்பு பனையேறிகள் செல்வந்தர்களாய்நாகரீகம் மிக்க சமுதாயங்களாய்சமுதாய அந்தாஸ்த்துடையவர்களாய் இருந்தனர்கிட்டத்தட்ட 843 மேற்பட்ட பனைசார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனஆனால் கடந்த 150 வருடங்களாய் பனைத்தொழில் நசிவடைந்து வருகிறது
ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலாய் பனை ஏறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லைசென்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டதுஏனெனில் கிழக்கிந்திய கம்பெனியில் பியறுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவேண்டும் என்ற அடிப்படையில் லைசென்ஸ் முறை நடைமுறையில் இருந்தது.
அதேநேரம் ஆங்கிலேர்கள் வந்த பின் கரும்பிலிருந்து வெள்ளை சர்க்கரையை சுக்ரோஸ் சை பிரிதெடுத்து தேநீர்,கேக்முதலியவற்றிற்கு பயன்படுத்தும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்அத்துடன் வெள்ளை சர்க்கரை வாடை இல்லாமலும் இருந்ததுஅதற்கென கரும்பிளிருக்கும் இரும்புசெம்புமுதலிய பல தாதுக்கைளை அகற்றப்பட்டது.
நாடு சுதந்திரமடைந்தபின்அரசின் தவறான கண்ணோட்டத்தின் விளைவாக கரும்பு உற்பத்திகரும்பு ஆலைகளின் நிர்மாணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுஇதனை தொடர்ந்து மிகப்பெரியபணப்பயிராக உருவெடுத்ததுஇதனை காந்திய பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா கடுமையாக எதிர்த்தார்மிகவும் வடிவமைக்கப்பட்ட தொழிச்சாளைகளாக உருவெடுத்தது கரும்பு சர்க்கரை உற்பத்திகடந்த ஐம்பத்து வருடங்களில் இந்தியாவில் கரும்பின் பரப்பு இரண்டு மடங்காகவும்உற்பத்தி ஆறு மடங்காகவும் உயர்ந்துள்ளதுஉலகில் பிரசிலுக்கு அடுத்து அதிகம் கரும்பு இந்தியாவில் உற்பத்தியாகிறது .இந்தியாவில் உத்திர பிரதேசம்மகாராஷ்டிராவிற்கு பிறகு தமிழகத்தில் அதிகம் கரும்பு உற்பத்தியாகிறது.

கரும்பு நீர் தேவை அதிகம் கொண்ட நீண்ட நாள் பயிர்.கரும்பிற்கு வணிக வரவேற்ப்பு இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நீரிலாதவர்கள் கூட ஆள் துளை கிணறுகள் தோண்டி கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.தென்னிந்தியாவில் கட்டுபாடட்ட்ற கரும்பு சாகுபடிநிலத்தடி நீரிணை கேள்விக்குறியாக்கியுள்ளது.கரும்பிலிருந்து பிரேசில் எரிபொருள் தயாரிப்பதால்நாமும் தயாரிக்க வேண்டும் கரும்பிற்கு விலையை கூட்ட வேண்டும் என்று போராடும் விவசாயிகளை காண்டால் அச்சமாக இருக்கிறதுநிலவும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க பலர் கரும்பை விரும்புவதால் நிலத்தடி நீரின் நிலை நிலத்தின் தன்மை இன்னும் மோசமாகும் சூழல் நிலவுகிறதுகடந்த 2007ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினால் நிலத்தடி நீர் இல்லாத கருப்பு ஒன்றியங்களாக வரையறை செய்யப்பட்ட பெரும்பாலான ஒன்றியங்களின் அந்தநிலைக்கு பின்னால் கரும்பு உற்பத்தி என்ற வணிக நோக்கம் அரசு அறியாதது அல்ல.

பிரேசிலில் 16 % எரிபொருள் கரும்பின் "எத்தனால்"கொண்டு பெறப்படுகிறதுபிரேசிலில் நீருக்கு பஞ்சமில்லைஅமேசான் காடுகளில் பெய்யும் மழையே போதும் கரும்பு வளரஇங்கு அப்படியாநிலத்தடி நீரை இரையாக்கினால் கரும்பு வளரும் கரும்பு வளர்ந்தால் எரிபொருள் தயாரிக்கலாம்எரிபொருள் தேவை என்பது பூர்த்தி செய்ய முடியாத ஒன்றுஅதற்காக நாம் கரும்பை பயிரிட்டு வாழ்வாதாரங்களை காவு கொடுக்க வேண்டுமா?என்று சற்றே யோசிக்க வேண்டும்இன்றைய சந்தப்பவாத காசுக்காகநிலையான செல்வங்களான நீர் நில வளங்களைஇழந்து விடக்கூடாது.
இன்று வெல்லத்தில் செய்யும் அதிரசம்எள்ளுருண்டை,கொழுக்கட்டைபோன்ற சமாச்சாரங்கள் மாறி வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்புகள் சமூகத்தில் மேலோங்கினஇத்துடன் பால் உற்பத்தி தேசியமயமானபின் இந்தியாவில் பால் இனிப்பு வகைகள் பல்கி பெருகினஇன்று கரும்பின் வெள்ளை சர்க்கரையை உபயோகப்படுத்துவோர் 99 % ஆகும்.அதனால் தான் இன்றுஇந்தியாவே நீரிழிவு என்னும் சர்க்கரை வியாதியில்உலகில் முதலிடம் வகிக்கிறது. .

போதாகுறைக்கு கரும்பு ஆலைகள் மொலாசசிலிருந்துசாராயம் காய்ச்சி மக்களின் கெடுக்கும் அவலமும் இந்த கரும்பினால் ஏற்படுகிறதுஅதுவும் குறிப்பாக தமிழகத்தில் கரும்பு சாராய வியாபாரம் அரசாங்கமே எடுத்து நடுத்தும் அவலம் கொடி கட்டி பறக்கிறது
பனையேறிகள் வாழ்வும்தென்னை விவசாயமும் நலிந்து கரும்பினை கொண்டு வளர்க்கும் இந்த கலாச்சாரம் பல குடியினரது வாழ்வாதாரத்தை கெடுப்பதுடன்ஒட்டு மொத்த மனிதனின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறது என்பது ஐயமின்றி தெளிவாகிறதுபனைத்தொழிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியதில் அரசின் தவறான வெள்ளை சர்க்கரைக்காதரவான கொள்கையே என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் பனைத்தொழில்:

தமிழுக்கும்தமிழர்களுக்கும் பனை மரங்கள் செய்த தொண்டு ஏராளம்ஆனால் தமிழைப் பாதுகாத்த பனை மரத்தை தமிழகமும்தமிழர்களும் பொருள்படுத்தாமல் இருப்பது நன்றி மறந்த செயலாகும்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் (குறிப்பாக தென்மாவட்டங்களில்பனை மரங்கள் களைச்செடியாகப் பரிதாபமாகக் காட்சி அளிப்பதைக் காண முடியும்.தமிழ்நாட்டில் மாநில மரமாக போற்றப்படும் பனை மரங்கள் தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்கள் இருந்தனதற் போது 30 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டனபனை மரங்கள் விறகு உள்ளிட்ட தேவைகளுக்காக வெட்டப்படுவது தவிர்க்கப் பட வேண்டும்.

பனையேறும் தொழிலாளர்களின் இன்றைய நிலை:

கிராமப்புற தொழில்களில் மிக முக்கியமான தொழிலாய் உள்ள பனைத்தொழிலை ஊக்குவிக்க,பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் உள்ளதுதமிழகத்தில் உள்ள பனைகளில் 14% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறதுஉடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்பின்னர் ஏற்பட்ட இயந்திரப் புரட்சி காரணமாக அனைத்துத்துறைகளிலும் உடல் உழைப்பு குறைந்ததால்பனை ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதுபனைத்தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பு அதிகம்ஆனால் அதற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லைஇதனால் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது.இத்தொழிலை அரசு ஊக்குவிக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட10இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பை பெறுவர்.
நவீன கண்டுபிடிப்புகளோஇயந்திர கருவிகளோ பனைத்தொழிலில் புகுத்தப்படவில்லைமாறாக 17ம் நூற்றாண்டில் பனைத்தொழில் நடைபெற்றதோ அவ்வாறுதான் இன்றும் நடைபெறுகிறதுஅரசுத்துறை மற்றும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சில இயந்திரங்களும் பனை ஏறும் தொழிலுக்கு உகந்ததாக இல்லை.
பனைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை இரண்டு வகையினராய் பிரிக்கலாம்முதல்வகையினர் சொந்தமாய் பனைகளை வைத்துக்கொண்டுசொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்களை போல பனைத்தொழிலை செய்பவர்கள்இரண்டாம் வகையினர் பனைகளை குத்தகைக்கு எடுத்தோவார முறையிலோ பனைத்தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள்.மொத்தத்தில் இரண்டாம் தரப்பினரே தொழிலில் அதிகம்.அவர்களின் தினசரி சிக்கலே இன்றும் பனைத்தொழிலின் சிக்கலாய் உள்ளதுஇவர்கள் நிலம் வைத்துள்ளவர்களிடம் கூடுதல் வட்டிக்கு வாங்கி பணத்தை கொண்டுதான் குத்தகைக்கு எடுக்கின்றனர்தொழில் நேரத்தில் கருப்பட்டியை பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

பனைத்தொழிலை மீட்டெடுக்க:

எனவே, பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து நம் தலைமுறைக்கு வழங்கிய பனை மரங்களை,வாழையடி வாழையாக வரும் நமது அடுத்த தலைமுறைகளும் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பாக வளர்ப்பதுதான் பனை மரங்களுக்கு நாம் செய்யும் கைமாறு. மாநில மரம் என்ற வகையிலும்,தமிழின் வளர்ச்சிக்கு ஓலைச்சுவடியாக உதவியது என்ற வகையிலும் பனை மரங்களைப் பாதுகாப்பது தமிழக அரசின் முக்கிய கடமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியம். பனை மரங்களில் எளிதில் ஏறி இறங்கும் வகையில் காலத்துக்கு உகந்த கருவிகளைக் கண்டுபிடிக்க வேளாண் விஞ்ஞானிகளை அறிவுறுத்துவது, பனையில் இருந்து கிடைக்கும் பொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதும் மிக மிக அவசியம். பனைப் பொருள்களை ஆர்வமாக வாங்கி அதைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.


Friday, April 6, 2012

மருத்துவ பயிர் - கண்வலிக்கிழங்கு வளர்க்கும் முறை




கண்வலிக்கிழங்கு, காந்தள் மலர், கலப்பைக்கிழங்கு, செங்காந்தள் மலர், கார்த்திகைக்கிழங்கு (கண்வள்ளிக்கிழங்கு - சன் டி.வி.) என்றெல்லாம் அழைக்கப்படும் குளோரியோசா சூப்பர்பா (ஆங்கிலத்தில் மலபார் குளோரி லில்லி), ஒரு காலத்தில் மர்ம தேசப் பயிராகத்தான் இருந்து வந்தது. ஆனால் சமீப கால விலையேற்றத்தால் (2009 - ஒரு கிலோ ரூ.1600) தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பேசப்படும் ஒரு மூலிகைப் பயிராகிவிட்டது.

இதில் வெகுஜன ஊடகங்களான தினசரி, வார, மாத ஏடுகள் மற்றும் தொலைக்காட்சி போன்றவை செய்தியை முந்தித்தரும் நோக்கத்தில், இதை வாங்கும் நிறுவனங்களுக்கே தெரியாத மருத்துவப் பயன்களையெல்லாம் பட்டியலிடுவது அனைவரையும் ஆர்வம் கொள்ள வைத்துவிட்டது.(வயிற்றுவலி, பூச்சி மருந்து, ஆண்மை பெருக்கி - ஆர்வக் கோளாறில் கிழங்கை புடுங்கி சாப்பிட்டராதீங்க வாலிப வயோதிகர்களே, அப்புறம் உங்கள ஆண்டவனாலும் காப்பத்த முடியாது, ஆமாம் கிழங்கு மிகுந்த விஷத்தன்மை வாய்ந்தது)

மாற்றுப்பயிர் தேடும் ஆர்வம் மிகுந்த விவசாயிகளுக்கு ஒரு சலனத்தை (சபலத்தை) இந்தப்பயிர் நிச்சயமாக ஏற்படுத்தியுள்ளது மறுக்கமுடியாது. இது போன்ற புதுப்பயிர்களை முயற்சி செய்யும் முன் அது பற்றிய சாகுபடித்தகவல், சந்தை நிலவரம், முதலீடு, எதிர்காலம் போன்றவற்றை நன்கு தெரிந்துகொண்டு அதன் பின் முயற்சிக்கலாம். எனவே கண்வலிக்கிழங்கு சாகுபடி பற்றி முடிந்தவரை முழுமையான தகவல்களை தந்துள்ளேன்.

தாவர பெயர் : குளோரியோசா சூப்பர்பா
குடும்பம் :லில்லியேசியே

பிற மொழி பெயர்கள்
ஆங்கிலம் :மலபார் குளோரி லில்லி
தெலுங்கு :அடவிநாபி
மலையாளம் :காந்தள்
கன்னடம் :கொலிகுட்டுமா
ஹிந்தி :கலிஹரி


சாகுபடிக்கு வந்த விதம்.

முதன் முதலில் என்ற ஜெர்மன் நிறுவனம் தனது ஆராய்ச்சியின் மூலமாக கோல்சிசின் என்ற மூலப்பொருள் இதன் கிழங்கு மற்றும் விதைகளில் இருப்பதை கண்டறிந்தது அதன் பின் ஆல்தியா என்ற பெயரில் ஒரு இத்தாலிய மருந்து நிறுவனம் இதனை வணிக ரீதியில் சாகுபடிக்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிகண்டது.

சாகுபடியாகும் இடங்கள்

மொத்த உற்பத்தியில் 95 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக கரூர், திண்டுக்கல், திருப்பூர், சேலம், பெரம்பலூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது, ஏறக்குறைய 700௮00 டண் விதை உற்பத்தியாகிறது.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

இந்த பயிர் பொதுவாக வரண்ட நில தோட்ட பயிராகும்.ஓரளவு மழை உள்ள சமவெளி பகுதிகள்,நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான எந்த நிலமானாலும் சரி தான்.

வடிகால் வசதி இல்லாத நிலத்தில் பயிர்



வடிகால் வசதி உள்ள இடத்தில் பயிர்




சாகுபடிக்கு ஏற்ற மண்

நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண், மணல் கலந்த செம்மண், ஒடக்கல் அல்லது வெங்கக்கல் கலந்த செம்மண் ஆகியவை ஏற்றது. வடிகால் வசதியில்லாத தாழ்வான நிலங்கள், களிமண், சதுப்பு நிலம் போன்றவை ஆகாது. கடலை, குச்சிக்கிழங்கு, மஞ்சள், கோலியஸ் போன்றவை நன்கு விளையும் நிலமாக இருந்தால் போதும். அடியில் உள்ள இரண்டு இடங்களும் முந்தைய நாள் மழை பெய்த நிலம், வித்தியாசத்தை பாருங்கள்.

சாகுபடிக்கு ஏற்ற பருவம்

ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் விதைக்கிழங்கு நடவு செய்ய ஏற்ற காலம்,

விதைக்கிழங்கு சேகரம் செய்தல்

விதைக்கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகளிடமிருந்தோ, காடுகளில் சேகரம் செய்தோ ஒலைக்குடிசை போன்ற வெப்பம் தாக்காத இடங்களில், தரையில் 5 - 10 செ.மீ. உயரத்திற்கு மணலைக் கொட்டி அதன் மீது சேகரம் செய்த கிழங்குகளை 15 - 20 செ.மீ. அகல வரப்புக்கள் போன்று 20 செ.மீ. உயரத்திற்கு மிகாமல் காற்றோட்டமாக வைக்கவும். பெவிஸ்டின் 5 கிராம் ஒரு கூடை மணலில் கலந்து தூவிவிடுவது நல்லது.


தவறான முறை



சரியான முறை




விதைக்கிழங்கைக் கையாளுதல்

கிழங்கை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போது கண்டிப்பாக அட்டைப் பெட்டியில்தான் கொண்டு செல்லவேண்டும். அதிக பட்சமாக ஒரு பெட்டி 30௪0 கிலோவிற்கு மிகாமல் இருக்கவும். நடவிற்கு எடுத்து செல்லும் போது கூடை போன்றவற்றில் காகிதம் அல்லது வைக்கோல் வைத்து எடுத்து செல்லவும்.









தேவையான விதைக் கிழங்கு

சிறிய கிழங்காக இருந்தால் (40- 50 கிராம்) 500 கிலோ ஒரு ஏக்கருக்கும், பெரிய கிழங்காக இருந்தால் (100 - 120 கிராம்) 600 கிலோ ஒரு ஏக்கருக்கும் தேவைப்படும். கிழங்கு 40 கிராமுக்கு குறைவாக இருந்தால் முதல் வருடம் 100 கிலோவுக்கு குறைவாகத்தான் விளைச்சல் கிடைக்கும்.

உபயோகமற்ற கிழங்குகள்


பெரிய, சிறிய, நடுத்தர கிழங்குகள்



உழவு

குறைந்தது 2 - 3 உழவு அவசியம், அதில் ஒன்று 5 கலப்பை உழவு போடுவது நல்லது. மண் அமைப்பிற்கு ஏற்றவாறு உழவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். கடைசி உழவில் 2 - 3 டண் மக்கிய தொழு உரம் இடவேண்டும்.

வரப்பு அமைத்தல்

6 அடி இடைவெளி விட்டு வரப்பு அமைக்கவும், வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கு நடவிற்கு குழி வரப்பும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பும் அமைக்கவும்.



நடவு செய்யும் பக்குவம்

முடிந்த வரை கிழங்கு முளைப்பு வந்த பின் நடவு செய்தால் 100 சதவீத முளைப்புத்திறன் இருக்கும், ஆனால் முளைப்பு வந்த கிழங்கைக் கவனாமாக கையாள வேண்டும், இல்லையென்றால் மிருதுவான முளைப்பு உடைந்து விடக்கூடும்.





நடவு செய்யும் முறை

வாய்க்கால் பாசனமாக இருந்தால் கிழங்கை வாய்க்காலிலும், சொட்டு நீர் பாசனமாக இருந்தால் மேட்டு வரப்பிலும் 5 - 10 செ.மீ. (மண் தன்மைக்கேற்ப) ஆழத்தில் கிழங்குகளை படுக்கை வசமாக 10 செ.மீ. இடைவெளியில் வரிசையாக வைக்கவும். படத்தில் சற்று நெருக்கமாக இருக்கும், இந்த அளவிற்கு அடர்த்தி தேவையில்லை.

சொட்டு நீர் பாசனம்



வாய்க்கால் பாசனம்





நீர் பாசனம்

நடவு முடிந்ததும் உயிர் நீர் உடனடி அவசியம் இல்லை எனினும் இரண்டொரு நாட்களில் தண்ணீர் விடவேண்டும்.




முளைப்பு

சரியான பருவம் வந்தாலோ அல்லது பருவ மழை நன்கு பெய்தாலோ உடனடியாக முளைப்பு வந்துவிடும். மூங்கில் குருத்து போல் வேகமாக வளர ஆரம்பிக்கும், பருவ மழை சரியாக தொடர்ந்து பெய்தால் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.