நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவர்கள் நாம்...
மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நாம் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன தற்கால குழந்தைகள்!!
கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறோம் நாம்..
மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
நானும் மரம் தான் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் நானும் மரம்
ஆகத்தான் ஆசைப்படுகிறேன்..
ஆதாலால் மரங்களை வெட்டாதீர்கள்..
No comments:
Post a Comment