அருகம்புல்
வயல் வரப்புகள்,தரிசு நிலங்களில் அதிகமாக வளரகூடியது அருகம்புல் பெரியோர்கள் முதல் சிரியவர்கள் வரை இப்புல்லை தெரியதவர்கள் இருக்கமுடியது..
அருகு, பதம், தூர்வை, மேகாரி, மூதண்டம்... என்ன இது, புரியாத பெயர்களின் அணிவகுப்பாக இருக்கிறதே என ஆச்சர்யப்பட வேண்டாம். அருகம்புல்லுக்குத்தான் இத்தனை பெயர்கள்!
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.
புல் வகையைச் சேர்ந்த இந்தச் சிறு செடியின் மருத்துவக் குணங்கள் ஏராளம். குளிர்ச்சியான தன்மையைக்கொண்ட அருகம்புல் இனிப்புச் சுவை உடையது. மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் அருகம்புல் சுகாதாரமான வாழிடங்களில் இருந்து சேகரிக்கப்படுதல் அவசியம்.
இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்ட தாவரம் ஆகும்.
கைப்பிடி அருகம்புல்லை பரித்து சுத்தம் செய்து.ஒன்று இரண்டாக நறுக்கி நான்கு தம்ளர் தண்ணீரில், சிறிது மிளகுத்துள் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.ஒரு தம்ளராக வரும் வரை நன்றாக காய்ச்சி வடிக்கட்டி கொள்ள வேண்டும்.தேவையான அளவு பனகற்கண்டு சேர்த்து, இளஞ்சுாடக தினமும் இருவேளை குடித்து வந்தால் வெள்ளைபடுதல் தீரும்..
சேகரிக்கப்பட்ட அருகம்புல்லுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்த்து வந்தால் சொறி,சிரங்கு மாறும்.இவ்வாறு தேய்த்த பின்பு ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கைப்பிடி அருகம்புல்லை தண்ணீரில் கழுவி அரைத்து,காய்ச்சாத ஆட்டுபாலில் கலந்து தொடர்ந்து 2 மதாங்கள் குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி கட்டுபடும்.
அருகம்புல் சாறு 20 மி்ல்லி தண்ணீர் 20 மில்லி, அரை தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் வரை குடித்து வந்தால் வயிற்றுபுண் நோய் குணமாகி வரும்.
சுத்தமான இடத்தில் வளரும் அருகம்புல்லை மட்டும் மருத்துவத்துக்கு பயன்படுத்த வேண்டும்
இரத்த மூலத்தை கட்டுபடுத்தி, இரத்தத்தை சுத்தம் அடைய செய்யும் பண்பும் இந்த மூலிகை்கு உண்டு
No comments:
Post a Comment