Wednesday, May 16, 2012

வந்து விட்டது கத்தரி வெயில் - தப்பிப்பது எப்படி...


வந்து விட்டது கத்தரி வெயில் -  தப்பிப்பது எப்படி...



                       து கோடை வெயிலின் உக்கிரம் அதிகம் இருக்கும் காலம். கத்திரி வெயிலின் தாக்கம் மனிதர்களை பல அவஸ்தைகளுக்கு உள்ளாக்குகிறது.

கத்திரி வெயில் இயற்கையின் கொடைதான். இந்தக் காலங்களில் மண்ணில் உருவாகின்ற பல கிருமிகள் இந்த கடும் வெப்பத்தினால் அழிக்கப்படுகின்றன. இதனால் அடுத்துவரும் மழைக்காலத்தில் பயிர்கள் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடும். அதுபோல் மனிதர்களை தாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது.









வெயில் தாக்கம் தணிய சில டிப்ஸ்.. 


  • உச்சி முதல் உள்ள கால் வரை இந்த தாக்கம் இருக்கும் அதனை தணிக்க சின்ன டிப்ஸ்..
    வாரத்துக்கு இரண்டு முறை நன்றாக தலைக்கு, மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக ஊற வைத்து பின்பு குளிக்கவும்.
    இதன் மூலம் உடல் சூடு குறையும்.
    கண்கள் மிகவும் சோர்வடைந்து அதிக எரிச்சல் கொடுக்கும் அதனை போக்க இரவில் தூங்கும் முன்பு கண்களுக்கு விளக்கெண்ய் இரண்டு சொட்டு கண்ண்களுக்கு விடவும். கண்களை சுற்றியும் நன்றாக தடவி விட்டு படுக்கவும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
    குளிக்கும் பொழுது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிர் பேஸ்ட் தேய்க்கலாம். அல்லது நூங்குத் தோலை நன்றாக அரைத்து அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பருப்பு மாவு கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் மென்மையகும்.

கோடையினை சமாளிப்போம்

  • வெயில்காலங்களில் நம் அனைவரின் பெரும் பிரச்சனை வியர்வை தான்
    அதனை சமாளிக்க காலையில் வெயில் ஆரம்பம் ஆகும் முன்பே குளிக்கவும்.
    குளிக்கும் தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு குளிக்கவும்.
    காட்டன் ஆடைகளையும் கொஞ்சம் லூஸான ஆடைகளை போடவும்.
    சிலர் ஒரே ஆடையினை இரண்டு முறை பயன்படுத்திய பின்பு துவைப்பாங்க, ஆனால் இந்த வெயில் காலங்களில் அதிக வியர்வை வெளியாவதால் அதிக கிருமிகள் ஆடைகளில் இருக்கும். துர்நாற்றம் அடிக்கும். ஆகையால் ஒரு நாளுக்கு ஓர் ஆடை போடவும்.

    வெயில் காலங்களில் காரம் குறைவான உணவுகளை சாப்பிடுங்கள். சுடசுட வயிறு முட்ட சாபிட வேண்டாம். மோர், பழவைகளை, தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ளவும். வேலைகளையும் சீக்கரமாகவே முடிக்கவும்.
    வீட்டை சுற்றி சின்ன தோட்டமிருந்தால் அதற்க்கு காலை மாலை தண்ணீர் ஊற்றினால் வீடும் குளூமையாக இருக்கும்.
    கதவு, ஜன்னல் ஸ்கீரீனௌ தண்ணீரில் முக்கி போடுங்க. காற்றுபட்டு குளூமையாக இருக்கும்.
    மாலை வந்தவுடன் மீண்டும் ஒரு முறை குளிக்கவும். டார்க் கலர் ஆடைகள் அணிவதை தவிர்த்துவிடவும்...

வெயில் காலங்களில் உங்கள் முகம் மீது அக்கரை காட்டுங்கள்

வெயிலில் அலைவதால் சருமம் கருப்பதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது மட்டும் தான்
வெயில் காலம் முடியும் வரை வாரம் ஒரு முறை முகம், கழுத்து, கைகளுக்கு ஹெர்பல் பேக் போடுங்க।
ஐஸ் க்யூப்பை மெல்லிய துணியில் போட்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுங்க முகம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்
தோல் சீவிய வெள்ளரிப்பழத்தை நன்றாக அறைத்து முகத்துக்கு பேக் போடவும்
।பாதம் எண்ணெயினை குளிர்க்கும் முன்பு உடலில் தேய்த்துக்கொண்டு குளிக்கவும்।
பச்சை பாலை சிறுது பஞ்சில் முக்கி முகத்தில் தடவவும்। காய காய 3, 4 முறை தொடர்ந்து செய்யவும்।




ஓட்ஸ், 2 பாதம்பருப்பு, சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்துக்கு பேக் போடலாம்.
கை,கால்களில் வாஷலின் அல்லது சன் கீரீம் தடவி பின்பு வெளியே போகவும்.
நிறைய தண்ணீர் குடிங்க... கோடைக்கு குட் பை சொல்லுங்க..


கோடையில் ஓர் குளூமையான பழம்

  • கோடையில் ஓர் குளூமையான பழம்
    வெயிலின் கொடுமையினை சமாளிக்க ஓர் அமிர்தம் தான் தர்பூசினி பழம்
    வெயிலால் முகம் சிலருக்கு கருமையாக மாறும் அதனை தடுக்க தர்பூசணிப்பழசாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும்.
  • உடல் சூடு தனிய தர்பூசணியுடன் இளநீர் கலந்துக் குடிக்கவும்.
    சிலருக்கு உடல் சூட்டால் வயிற்று வலி வரும் அதனை போக்க சிறிது பதநீர், தர்பூசணிப்பழத்துண்டுகள், ஐஸ் கட்டி சேர்த்து சாபிட்டால் வயிற்று வலி சரியாகும்

  • கோடை காலத்தில் ஏற்படும் பல உடல் உஷ்ணங்களை தீர்க்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.
    வெயில் காலங்களில் சிலருக்கு கண்கள் சிவந்திருக்கும் அதனை போக்க தர்பூஸ் சாறுடன் பால் கலந்து குடிக்கலாம். இது தொண்டை வலியும் போக்கும்.

    • குளிர்க்கும் முன்பு உடல் முழுவதும் தர்பூசணிப் பழத்தை தேய்த்துக் குளித்தால் உடல் அரிப்பு சரியாகும், கண்கள் மீது வைத்தால் கண்கள் எரிச்சல் சரியாகும்

      தர்பூசணிப் பழச்சாறுடன் மோர் கலந்து குடித்தால் சிறுநீரக எரிச்சல் சரியாகும்.

      தர்பூசணிப் பழவிதைகளை காய வைத்து சிறுது தண்ணீர் ஊற்றி அரைத்து அடி வயிற்றில் பூசினால் நீர்கடுப்பு சரியாகும்.


கத்திரி 

வெயிலின் போது சில சமயங்களில் மழை பெய்யும். அப்படி மழை பெய்தால் மக்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும். இதைப்பற்றி நம் முன்னோர்கள் கத்திரி வெயிலின் காலத்தில் மழைபெய்தால் விளைச்சல் குறையும், மக்களை நோய்கள் தாக்கும் என்பார்கள்.

இந்த வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் தோல் தான் முதன்மை வகிக்கிறது.

சருமத்தை பாதுகாக்க 

வெயில், மழை, பனி என வெளிப்புற சூழ்நிலைக்கேற்ப உடலின் தன்மையை மாற்றியமைப்பது சருமம்தான். வெயில் காலத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் சருமம் தான். சருமத்தில் பல கோடிக்கணக்கான துவாரங்கள் நிறைந்துள்ளன. இந்த துவாரத்தின் அடிப்பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகளில் வியர்வை சுரந்து துவாரங்களின் வழியாக வெளியேறுகிறது.

கோடை வெப்பமானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை அதிகம் ஊறிஞ்சிவிடுகிறது. மேலும் வியர்வை துவாரங்களில் மாசு படிவதால் வியர்வை நாற்றம் உண்டாகும். சருமத்தில் வியர்குரு கட்டிகள் உருவாகும். சிறு குழந்தைகளுக்கு வேனல் கட்டி, புண்கள் ஏற்படும். அம்மை நோயின் தாக்கங்கள் கூட ஏற்படலாம். 

ஏப்ரல், மே (பங்குனி,சித்திரை, வைகாசி) மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.

· சருமத்தை நன்றாக பராமரித்தாலே கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பலாம். 

· கோடை காலத்தில் தினமும் இருமுறை குளிக்க வேண்டும். 

· வெளியில் செல்லும் போது கை, கால்களில் சிறிது எண்ணெய் தடவிச் செல்வது நல்லது. சருமத்தை வறட்சியுறச்செய்யும் பவுடர்களையோ, சோப்புகளையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

· வெயிலில் சென்று வந்தவுடன் அதாவது வியர்வையுடன் குளிக்கவோ, கை, கால், முகம் கழுவவோ கூடாது. சிறிது நேரம் அமர்ந்து வியர்வை காய்ந்தபின் குளிப்பது நல்லது. ஏனென்றால் சருமத்தின் துவாரங்களில் வியர்வை வந்திருக்கும் இந்த துளைகள் வழியாக நீர் உட்புகுந்தால் உடலில் பலவித நோய்களை உருவாக்கும். 

· இறுக்கமான ஆடைகளை உபயோகிக்கக் கூடாது. வெண்மையான பருத்தி ஆடைகள் தான் வெயிலுக்கு ஏற்றது.

· அடிக்கடி நீர் அருந்துவதால் வெப்பத்தில் உறிஞ்சப்படும் நீரை சரி செய்து உடல் சூட்டை சமநிலைப்படுத்தலாம்.

· நீர் சத்து நிறைந்த காய்களான சுரக்காய், பரங்கிகாய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

· தர்பூசனி, ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரி, கீர்ணிப்பழம், பனைநுங்கு, இளநீர் அருந்துவது நல்லது.

· மோரில் அதிக அளவு நீர் சேர்த்து அருந்துவது நல்லது.

· சருமத்தை பாதிக்காமல் இருக்க பயன்படுத்தும் லோஷன்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.

· அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தவிர்க்கவும், காரம், புளி அதிகம் சேர்க்கக் கூடாது.

கண்களைப் பாதுகாக்க 

· உச்சி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

· கண்களுக்கு நல்ல தரமான சூரிய வெப்ப தடுப்பு (கூலிங்கிளாஸ்) கண்ணாடி அணிந்து செல்லுங்கள். முகத்தை அடிக்கடி கழுவுங்கள், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

· அக்குள், தொடை இடுக்குகளில் வியர்வையை துடைத்து நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

· கழுத்தின் பின்பக்கம், தலைப்பகுதி அதிகம் வியர்க்கும். அவ்வப்போது தலையை துவட்டி, கழுத்துப் பகுதியை பருத்தியினாலான துணி வைத்து துடைக்க வேண்டும்.

· நல்ல காற்றோட்டம் மிகுந்த அறைகளில் படுக்க வேண்டும். குளிர்சாதன அறையில் தூங்கும்போது வெளிப்புற வெப்பத்தின் அளவைப் பொறுத்தே குளிர்சாதன அறையின் குளிர் தன்மையும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வெளிப்புற வெப்ப நிலைக்கு எற்ப உடலின் தன்மை அமையும். முற்றிலும் மாறுபட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

சிறுநீர் நோய் தாக்காமலிருக்க

வெயில் காலத்தில் உடம்பில் தேவையற்ற நீர் வியர்வையாக அதிகம் வெளியேறும். இதனால் சிறுநீர் கொஞ்சம்தான் வெளியேறும். மேலும் உடலில் நீர்ச் சத்து குறைவதால் நீர் எரிச்சல், நீர்த்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு உருவாகும். இக்குறை நீங்க அடிக்கடி சுத்தமான நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் பருகினால்தான் உடலின் நீர்ச்சத்தையும் உடல் வெப்பத்தையும் சீர்படுத்த முடியும்.

மோர், எலுமிச்சை ஜூஸ் மதிய வேளையில் பருகுவது நல்லது. 

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எளிதில் விடுபட்டு கோடை விடுமுறையை குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடுங்கள்.

Thursday, May 10, 2012

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு...



கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுஅந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது.

5
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும்.

சத்தான கடுகு

கடுகில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. கடுகில் செலினியம் அதிகம் செரிந்துள்ளது. இதில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. கடுகில் உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.

மைக்ரேன் தலைவலி

கடுகானது மைக்ரேன் தலைவலிக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தடீஸ், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற வைகளை குணமாக்குகிறது. தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

ஜீரணக்கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகு சிறந்த மருந் தாகும். ஜீரணத்தை தூண்டும் சக்தி கடுகுக்கு உண்டு. தினமும் உணவில் கடுகை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுகை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் மிளகு பொடி, உப்பு சேர்த்து காலையில் ஒரு ஸ்பூன், அளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி அஜீரணக் கோளாறைப் போக்கும்.

உணவு உண்பதற்கு முன்பு கருப்பு கடுகினை 20 நிமிடம் ஊறவைத்து அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஜீரணசக்தி கிடைக்கும். அஜீரணக் கோளாறால் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றில் வலியை உண்டாக்கும். இந்த வயிற்று வலி நீங்க கடுகை பொடி செய்து வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும்.

சைனஸ் கோளறு நீங்கும்

ஒரு சிலருக்கு இருமும் போது தலைப்பகுதி முழுவதும் வலி உண்டாகும். இந்த இருமல் நாளுக்கு நாள் அதிகரித்து தலைச்சுற்றலை உண்டாக்கும். கடுகுப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இந்த இருமல் நீங்குவதுடன் தலைவலியுடன் உண்டாகும் இருமல், மூக்கில் நீர் வடிதல், அதிக உமிழ்நீர் சுரத்தல் போன்றவை குறையும்.

விஷ முறிவு மருந்து

சிலர் தெரிந்தோ தெரியாமலோ விஷம் சாப்பிட நேரிட்டால் அவர் களுக்கு முதலில் கடுகை அரைத்து நீரில் கலந்து கொடுத்தால் வாந்தி உண்டாகும் இந்த வாந்தியுடன் உள்ளிருக்கும் விஷமானது வெளி யேறும். சில வகையான காணாக்கடிகளுக்கு கடிபட்ட இடத்தில் கடுகு அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

சிறுநீர் கோளாறுகள்

கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை இருமல், இரைப்பு இருப்பவர்கள் மார்பு, தொண்டைப் பகுதிகளில் தடவி வந்தால் இருமல் இளைப்பு நீங்கும். தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போடலாம். கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்

கருப்பை கட்டி

கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமை யலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும். கருப்பைக் கட்டியைச் சுருக்குவதில் கடுகு எண்ணெய் பெரும்பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறையும் கடுகு மற்றும் சீரகம் போன்றவற்றைத் தாளிக்க நீங்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்தவும். வயிற்றின் மீது வெளிப்பூச்சாகவும் கடுகெண்ணெயை வெதுவெதுப்பாகப் பூசி, காலையில் வெந்நீரில் குளித்துவர, வலி நீங்கும். கடுகானது பெண்களின் மெனோபாஸ் கால சிக்கலை நீக்குகிறது. 
நல்ல உறக்கத்தை தருகிறது.