Showing posts with label மக்கள் நலம். Show all posts
Showing posts with label மக்கள் நலம். Show all posts

Sunday, January 27, 2013

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:-


திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும்பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.
உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.

பெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.
குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்:
1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.
2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.
3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.
4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.
6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.
7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.
8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.
10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும்


Friday, July 6, 2012

புகைப்பிடிப்பவரா நீங்கள்புகைப்பிடிப்பவரா நீங்கள்? இதை படிங்க...இதையும் பாருங்க....? சில எச்சரிக்கை குறிப்புகள்..!!(படங்களுடன்))


புகைப்பிடிப்பவரா நீங்கள்? இதை படிங்க...இதையும் பாருங்க....

நீங்கள் புகைப்பிடிப்பவரா? உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்..!

புகைப்பிடிப்பதால் ஞாபக சக்தியை இழக்க நேரிடும். நீங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பொழுதுபோக்காக, விளையாட்டாக புகைப்பிடித்தலை ஆரம்பித்திருக்கலாம்.

புகைப்பிடிப்பது உங்களுக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி..!

மனக் கவலையைப் போக்க.. நண்பர்களின் பிடிவாதத்தால் "ஒன்றே ஒன்று மட்டும்.. எனக்காக ப்ளீஸ்.. " என்று நண்பர்களின் வேண்டுகோளை தட்டமுடியாமல்,

"அப்பா சிகரெட் பிடிக்கிறாரே.. நாமும் பிடித்துப்பார்த்தால் என்ன?" என்று திருட்டு தனமாக.. 

"வாய்வழியாக புகையை இழுத்து மூக்கின் வழியாக எப்படி வருகிறது? நாமும்தான் விட்டுப் பார்ப்போமே?" என்று சிறுபிள்ளைத்தனமாக..

சாம்பலாவது சிகரெட் மட்டுமல்ல.. விரைவில் நீங்களும்தான் !

"நம்முடைய ஹீரோ எவ்வளவு ஸ்டைலாக புகைப்பிடிக்கிறார். அதுபோல நாமும் செய்தாலென்ன என்ன" என்று... 


புகைபிடிப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் அருகில் இருப்பவர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும்

இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் புகைப்பழக்கத்தை ஆரம்பித்து இருப்பீர்கள்..

தொடர்ந்து அதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அதுவே தொடர் பழக்கமாகியிருக்கும். பிறகு அது ஒரு போதையாகவே மாறிப்போயிருக்கும். சிகரெட் புகையை இழுத்து ஊதித்தள்ளுவதில் ஒரு அலாதி சுகமாக மாறிபோயிருக்கும். எத்தனைப் பேர் சொன்னாலும் இனி மாறப்போவதில்லை என்ற நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டிருப்பீர்கள். 


புகையிலைப் பொருளான சிகரெட்டை ஒதுக்குவோம்.

சிகரெட், பீடி இதுபோன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்த பழகிவிட்ட பிறகு அதை  விடுவது என்பது இயலாததாகியிருக்கும்.

நான் சொல்வது சரியா? ஆனால் நிச்சயம் இந்த பழக்கத்தை விட முடியும். நாம் நினைத்தால் எதுவுமே சாத்தியமே..!

மனது வைக்க வேண்டும்.. அப்போதுதான் இதிலிருந்து விடுபடமுடியும்.


புகைப்பிடிப்பதால் உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் குழந்தைகளையும் அது பாதிக்கும். சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டாலே நீங்கள் கிட்டதட்ட சிகரெட்டை நிறுத்திவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதற்கு முன்பு இதன் விளைவால் என்னென்ன தீமைகள் என்று நாம் அறிந்துகொண்டாலே கிட்டதட்ட அடுத்த நொடியே இந்த பழகத்தை வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள்..

இந்தப் படத்தில் பாருங்கள் சிகரெட் பிடிப்பதால் தோல்சுருங்கிய முகம்.


முதலில் இந்த பழக்கதைத் கைவிடுவதால் நம் அறிவுசார்ந்த செயல்பாடுகள் இன்னும் செம்மைப்படும். ஞாபகச் சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

புகைப்பிடித்ததின் விளைவு.. தோல் அதன் இயல்புதன்மை மாறியிருக்கிறது

புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில்(Northumbria University, England) ஞாபகசக்தி குறித்த ஒரு செயல்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக இரண்டரை வருடங்களுக்கு முன்பு புகைப்பழகத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும், செயல்பட்டது தெரியவந்தது.


Northumbria University, England

இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் 'பின்னோக்கிய ஞாபக சக்தி' மேம்படுகிறது என்று தெரியவந்தது.

பின்னோக்கிய ஞாபக சக்தியா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறீர்களா?

அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறனைதான் இப்படி சொல்கிறோம்.


புகைப்பிடித்ததின் விளைவு.. நுரையீரல் சிற்றறைகளில் பாதிப்பு..

ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் தொலைநோக்கு ஞாபக சக்தி'யை அதாவது (ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக் கொண்டு எதிர்காலத்தில்ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதாகும். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின் யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்க கால புகைப்பழக்கத்தால் மூளையின் சில திசுக்கள் சிதைந்து போவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும் ஆய்வாளர்களின் யூகப்படி, புகைப்பபழக்கமானது முளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் தொலைநோக்கு ஞாபக சக்தியுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.



இரத்தத்தில் நிகோடின் படிவுகள்-Nicotine in the blood

இதிலிருந்து, புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை. நமக்குத் தெரியாமலேயே நம்முடைய தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்பது தெளிவாகிறது.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள்: 

  • முடி நிறமாற்றம் அடைகிறது.(hair color change)
  • மூளையானது புகைத்தலுக்கு அடிமையாகிறது. எப்போதும் புகைக்கவேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்கும் நிலைக்கு மாறுவது.
  • காண்பார்வை குறைபாடுகளை. காட்ராக்ட் (cataracts) போன்றவை..
  • மூக்குக்கூட பாதிப்புத்தான்.. மன நுகர்ச்சித்தன்மை குறைதல்.
  • தோல் சுருங்கிப்போகும்(Wrinkle). இளவயதிலேயே வயதான தோற்றத்தை அடைதல்.
  • பற்களின் நிறமாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி(Gingivitis) போன்றவை.
  • வாய் மற்றும் தொண்டை பாதிப்புகள். உதாரணமாக உதடுகளின் வடு உண்டாவது,  உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர்ச்சி குறைதல், துர்நாற்றம் (கெட்ட வாசனை.)
  • ரத்த ஓட்டம் குறைவதால் கைகால்கள் செயலிழக்கும் தன்மை. இரத்தத்தில் நிகோடின் படிவுகள் சேர்தல்.
  • நுரையீரல் தொற்று நோய்கள், சுவாசப்பை புற்று நோய். நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD), சுவாசப்பைத் தொற்று (Pneumonia) ஆஸ்துமா போன்றவை
  • மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு.(Heart attack)
  • ஈரில் புற்று நோய் வரலாம்.
  • இப்பழக்கம் வயிற்றை விட்டுவைப்பதில். நாளடைவில்  அல்சர், குடல், இரப்பை, சதை புற்றுநோய், நாடி வெடிப்பு (Aneurysm) போன்றவையும் ஏற்படும்.
  • சிறுநீரகப் புற்று நோய்(Kidney cancer), சிறு நீர்ப் பை புற்று நோய்.
  •  எலும்பின் உறுதி குறைந்து வலுவிழத்தல். இதனால் எலும்பு முறிவு(Fracture) ஏற்படும் அபாயம்.
  • இனப்பெருக்கத் தொகுதி பாதிக்கப்படுதல், உதாரணமாக விந்தணுக்களின் வீரியம் குறைதல், ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை(Childlessness) போன்றவை.
  • இரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இரத்தப்புற்று நோய்(Blood Cancer), இதனால் விரைவில் நோய்வாய்ப்படும் தன்மை உண்டாகுதல்.
  • கால்கள் வலுவிழந்து,  உறுதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் காயம் ஏற்படல்.


எனவே புகைப்பதை நிறுத்துவோம். ஞாபகசக்தியை வலுப்படுத்துவோம்.

மேலும் சில படங்கள்..


தோல்பாதிப்பு



இரத்தத்தில் நிகோடின் கலப்பு


புகைப்பிடித்ததால் ஒட்டி, ஒடுங்கிப்போன முகம்



தோல் காயங்கள்



கண்பார்வை கோளாறு


முடிகொட்டுதல்

 விரலிடுக்கில் பாதிப்பு

நிகோடின் கறைபடிந்த பாதிப்புக்குள்ளான பற்கள்

Wednesday, May 16, 2012

வந்து விட்டது கத்தரி வெயில் - தப்பிப்பது எப்படி...


வந்து விட்டது கத்தரி வெயில் -  தப்பிப்பது எப்படி...



                       து கோடை வெயிலின் உக்கிரம் அதிகம் இருக்கும் காலம். கத்திரி வெயிலின் தாக்கம் மனிதர்களை பல அவஸ்தைகளுக்கு உள்ளாக்குகிறது.

கத்திரி வெயில் இயற்கையின் கொடைதான். இந்தக் காலங்களில் மண்ணில் உருவாகின்ற பல கிருமிகள் இந்த கடும் வெப்பத்தினால் அழிக்கப்படுகின்றன. இதனால் அடுத்துவரும் மழைக்காலத்தில் பயிர்கள் பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடும். அதுபோல் மனிதர்களை தாக்கும் கிருமிகளையும் அழித்துவிடுகிறது.









வெயில் தாக்கம் தணிய சில டிப்ஸ்.. 


  • உச்சி முதல் உள்ள கால் வரை இந்த தாக்கம் இருக்கும் அதனை தணிக்க சின்ன டிப்ஸ்..
    வாரத்துக்கு இரண்டு முறை நன்றாக தலைக்கு, மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக ஊற வைத்து பின்பு குளிக்கவும்.
    இதன் மூலம் உடல் சூடு குறையும்.
    கண்கள் மிகவும் சோர்வடைந்து அதிக எரிச்சல் கொடுக்கும் அதனை போக்க இரவில் தூங்கும் முன்பு கண்களுக்கு விளக்கெண்ய் இரண்டு சொட்டு கண்ண்களுக்கு விடவும். கண்களை சுற்றியும் நன்றாக தடவி விட்டு படுக்கவும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
    குளிக்கும் பொழுது சோப்புக்கு பதிலாக கடலைமாவு, தயிர் பேஸ்ட் தேய்க்கலாம். அல்லது நூங்குத் தோலை நன்றாக அரைத்து அதனுடன் சிறிது வெந்தயத்தூள், பச்சைப்பருப்பு மாவு கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் மென்மையகும்.

கோடையினை சமாளிப்போம்

  • வெயில்காலங்களில் நம் அனைவரின் பெரும் பிரச்சனை வியர்வை தான்
    அதனை சமாளிக்க காலையில் வெயில் ஆரம்பம் ஆகும் முன்பே குளிக்கவும்.
    குளிக்கும் தண்ணீரில் பாதி எலுமிச்சை சாறை ஊற்றி பின்பு குளிக்கவும்.
    காட்டன் ஆடைகளையும் கொஞ்சம் லூஸான ஆடைகளை போடவும்.
    சிலர் ஒரே ஆடையினை இரண்டு முறை பயன்படுத்திய பின்பு துவைப்பாங்க, ஆனால் இந்த வெயில் காலங்களில் அதிக வியர்வை வெளியாவதால் அதிக கிருமிகள் ஆடைகளில் இருக்கும். துர்நாற்றம் அடிக்கும். ஆகையால் ஒரு நாளுக்கு ஓர் ஆடை போடவும்.

    வெயில் காலங்களில் காரம் குறைவான உணவுகளை சாப்பிடுங்கள். சுடசுட வயிறு முட்ட சாபிட வேண்டாம். மோர், பழவைகளை, தண்ணீர் நிறைய எடுத்துக்கொள்ளவும். வேலைகளையும் சீக்கரமாகவே முடிக்கவும்.
    வீட்டை சுற்றி சின்ன தோட்டமிருந்தால் அதற்க்கு காலை மாலை தண்ணீர் ஊற்றினால் வீடும் குளூமையாக இருக்கும்.
    கதவு, ஜன்னல் ஸ்கீரீனௌ தண்ணீரில் முக்கி போடுங்க. காற்றுபட்டு குளூமையாக இருக்கும்.
    மாலை வந்தவுடன் மீண்டும் ஒரு முறை குளிக்கவும். டார்க் கலர் ஆடைகள் அணிவதை தவிர்த்துவிடவும்...

வெயில் காலங்களில் உங்கள் முகம் மீது அக்கரை காட்டுங்கள்

வெயிலில் அலைவதால் சருமம் கருப்பதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது மட்டும் தான்
வெயில் காலம் முடியும் வரை வாரம் ஒரு முறை முகம், கழுத்து, கைகளுக்கு ஹெர்பல் பேக் போடுங்க।
ஐஸ் க்யூப்பை மெல்லிய துணியில் போட்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுங்க முகம் ஃபிரெஷ்ஷாக இருக்கும்
தோல் சீவிய வெள்ளரிப்பழத்தை நன்றாக அறைத்து முகத்துக்கு பேக் போடவும்
।பாதம் எண்ணெயினை குளிர்க்கும் முன்பு உடலில் தேய்த்துக்கொண்டு குளிக்கவும்।
பச்சை பாலை சிறுது பஞ்சில் முக்கி முகத்தில் தடவவும்। காய காய 3, 4 முறை தொடர்ந்து செய்யவும்।




ஓட்ஸ், 2 பாதம்பருப்பு, சிறிது பால் சேர்த்து அரைத்து முகத்துக்கு பேக் போடலாம்.
கை,கால்களில் வாஷலின் அல்லது சன் கீரீம் தடவி பின்பு வெளியே போகவும்.
நிறைய தண்ணீர் குடிங்க... கோடைக்கு குட் பை சொல்லுங்க..


கோடையில் ஓர் குளூமையான பழம்

  • கோடையில் ஓர் குளூமையான பழம்
    வெயிலின் கொடுமையினை சமாளிக்க ஓர் அமிர்தம் தான் தர்பூசினி பழம்
    வெயிலால் முகம் சிலருக்கு கருமையாக மாறும் அதனை தடுக்க தர்பூசணிப்பழசாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கவும்.
  • உடல் சூடு தனிய தர்பூசணியுடன் இளநீர் கலந்துக் குடிக்கவும்.
    சிலருக்கு உடல் சூட்டால் வயிற்று வலி வரும் அதனை போக்க சிறிது பதநீர், தர்பூசணிப்பழத்துண்டுகள், ஐஸ் கட்டி சேர்த்து சாபிட்டால் வயிற்று வலி சரியாகும்

  • கோடை காலத்தில் ஏற்படும் பல உடல் உஷ்ணங்களை தீர்க்கும் சக்தி இந்த பழத்துக்கு உண்டு.
    வெயில் காலங்களில் சிலருக்கு கண்கள் சிவந்திருக்கும் அதனை போக்க தர்பூஸ் சாறுடன் பால் கலந்து குடிக்கலாம். இது தொண்டை வலியும் போக்கும்.

    • குளிர்க்கும் முன்பு உடல் முழுவதும் தர்பூசணிப் பழத்தை தேய்த்துக் குளித்தால் உடல் அரிப்பு சரியாகும், கண்கள் மீது வைத்தால் கண்கள் எரிச்சல் சரியாகும்

      தர்பூசணிப் பழச்சாறுடன் மோர் கலந்து குடித்தால் சிறுநீரக எரிச்சல் சரியாகும்.

      தர்பூசணிப் பழவிதைகளை காய வைத்து சிறுது தண்ணீர் ஊற்றி அரைத்து அடி வயிற்றில் பூசினால் நீர்கடுப்பு சரியாகும்.


கத்திரி 

வெயிலின் போது சில சமயங்களில் மழை பெய்யும். அப்படி மழை பெய்தால் மக்களுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும். இதைப்பற்றி நம் முன்னோர்கள் கத்திரி வெயிலின் காலத்தில் மழைபெய்தால் விளைச்சல் குறையும், மக்களை நோய்கள் தாக்கும் என்பார்கள்.

இந்த வெயில் காலத்தில் அதிகம் பாதிக்கப்படும் உறுப்புகளில் தோல் தான் முதன்மை வகிக்கிறது.

சருமத்தை பாதுகாக்க 

வெயில், மழை, பனி என வெளிப்புற சூழ்நிலைக்கேற்ப உடலின் தன்மையை மாற்றியமைப்பது சருமம்தான். வெயில் காலத்தில் முதலில் பாதிக்கப்படுவதும் சருமம் தான். சருமத்தில் பல கோடிக்கணக்கான துவாரங்கள் நிறைந்துள்ளன. இந்த துவாரத்தின் அடிப்பகுதியில் உள்ள வியர்வை சுரப்பிகளில் வியர்வை சுரந்து துவாரங்களின் வழியாக வெளியேறுகிறது.

கோடை வெப்பமானது சருமத்தில் உள்ள ஈரப்பசையை அதிகம் ஊறிஞ்சிவிடுகிறது. மேலும் வியர்வை துவாரங்களில் மாசு படிவதால் வியர்வை நாற்றம் உண்டாகும். சருமத்தில் வியர்குரு கட்டிகள் உருவாகும். சிறு குழந்தைகளுக்கு வேனல் கட்டி, புண்கள் ஏற்படும். அம்மை நோயின் தாக்கங்கள் கூட ஏற்படலாம். 

ஏப்ரல், மே (பங்குனி,சித்திரை, வைகாசி) மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.

· சருமத்தை நன்றாக பராமரித்தாலே கோடை வெப்பத்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பலாம். 

· கோடை காலத்தில் தினமும் இருமுறை குளிக்க வேண்டும். 

· வெளியில் செல்லும் போது கை, கால்களில் சிறிது எண்ணெய் தடவிச் செல்வது நல்லது. சருமத்தை வறட்சியுறச்செய்யும் பவுடர்களையோ, சோப்புகளையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

· வெயிலில் சென்று வந்தவுடன் அதாவது வியர்வையுடன் குளிக்கவோ, கை, கால், முகம் கழுவவோ கூடாது. சிறிது நேரம் அமர்ந்து வியர்வை காய்ந்தபின் குளிப்பது நல்லது. ஏனென்றால் சருமத்தின் துவாரங்களில் வியர்வை வந்திருக்கும் இந்த துளைகள் வழியாக நீர் உட்புகுந்தால் உடலில் பலவித நோய்களை உருவாக்கும். 

· இறுக்கமான ஆடைகளை உபயோகிக்கக் கூடாது. வெண்மையான பருத்தி ஆடைகள் தான் வெயிலுக்கு ஏற்றது.

· அடிக்கடி நீர் அருந்துவதால் வெப்பத்தில் உறிஞ்சப்படும் நீரை சரி செய்து உடல் சூட்டை சமநிலைப்படுத்தலாம்.

· நீர் சத்து நிறைந்த காய்களான சுரக்காய், பரங்கிகாய், வெள்ளரிக்காய், பூசணிக்காய் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

· தர்பூசனி, ஆரஞ்சு, திராட்சை, வெள்ளரி, கீர்ணிப்பழம், பனைநுங்கு, இளநீர் அருந்துவது நல்லது.

· மோரில் அதிக அளவு நீர் சேர்த்து அருந்துவது நல்லது.

· சருமத்தை பாதிக்காமல் இருக்க பயன்படுத்தும் லோஷன்களை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.

· அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தவிர்க்கவும், காரம், புளி அதிகம் சேர்க்கக் கூடாது.

கண்களைப் பாதுகாக்க 

· உச்சி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

· கண்களுக்கு நல்ல தரமான சூரிய வெப்ப தடுப்பு (கூலிங்கிளாஸ்) கண்ணாடி அணிந்து செல்லுங்கள். முகத்தை அடிக்கடி கழுவுங்கள், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

· அக்குள், தொடை இடுக்குகளில் வியர்வையை துடைத்து நீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

· கழுத்தின் பின்பக்கம், தலைப்பகுதி அதிகம் வியர்க்கும். அவ்வப்போது தலையை துவட்டி, கழுத்துப் பகுதியை பருத்தியினாலான துணி வைத்து துடைக்க வேண்டும்.

· நல்ல காற்றோட்டம் மிகுந்த அறைகளில் படுக்க வேண்டும். குளிர்சாதன அறையில் தூங்கும்போது வெளிப்புற வெப்பத்தின் அளவைப் பொறுத்தே குளிர்சாதன அறையின் குளிர் தன்மையும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் வெளிப்புற வெப்ப நிலைக்கு எற்ப உடலின் தன்மை அமையும். முற்றிலும் மாறுபட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

சிறுநீர் நோய் தாக்காமலிருக்க

வெயில் காலத்தில் உடம்பில் தேவையற்ற நீர் வியர்வையாக அதிகம் வெளியேறும். இதனால் சிறுநீர் கொஞ்சம்தான் வெளியேறும். மேலும் உடலில் நீர்ச் சத்து குறைவதால் நீர் எரிச்சல், நீர்த்தாரை எரிச்சல், நீர்க்கடுப்பு உருவாகும். இக்குறை நீங்க அடிக்கடி சுத்தமான நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் பருகினால்தான் உடலின் நீர்ச்சத்தையும் உடல் வெப்பத்தையும் சீர்படுத்த முடியும்.

மோர், எலுமிச்சை ஜூஸ் மதிய வேளையில் பருகுவது நல்லது. 

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து எளிதில் விடுபட்டு கோடை விடுமுறையை குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடுங்கள்.