Tuesday, January 29, 2013

ரோஜாவின் கண்ணீர்



பன்னீர் வாசனை தான்
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்
அது ரோஜாவின் கண்ணீர் என்று !

வலி



என் கைகளில் முட்கள்
குத்திய போது கூட
எனக்கு வலிக்கவில்லை...
ஆனால், அவள் என் கைகளை
உதறி விட்டு சென்ற போது
வலித்தது ...!
கைகள் அல்ல,
என் இதயம்...!

வாழ்க்கை



நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது...
அது தான் வாழ்க்கை...!

வாழ்க்கை



விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !

வாழ்வின் ரகசியம்



நாம் யாருக்காக வாழ்கிறோம்
என்று நமக்கு தெரியும்...
ஆனால், நமக்காக யார் வாழ்கிறார்கள்
என்று நமக்கு தெரிவதில்லை...

வெற்றி


காயம் இல்லாமல் கனவுகள் காணலாம்

ஆனால்,வலி இல்லாமல்
வெற்றிகள் காணமுடியாது!

வெற்றி



வெற்றி வரும் வரை
குதிரை வேகத்தில் ஓடு...
வெற்றி வந்த பிறகு
குதிரையை விட வேகமாக ஓடு...
அப்போதுதான்...!
வெற்றி உன்னிடம்

நிலைத்திருக்கும்.