Monday, April 2, 2018

கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள் #SummerTips

கோடையில் வெயில், வெக்கை, வியர்வை... விரட்ட துணைநிற்கும் உணவுகள் #SummerTips



நம் முன்னோர்கள், ஒரு வருடத்தை உத்ராயணக் காலம் (தை முதல் ஆனி வரை) தட்சணாயன காலம் (ஆடி முதல் மார்கழி வரை) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளனர். தை மாதத்தில் சூரியன் தனது பாதையின் தெற்குப் பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் நுழையும் காலத்தை உத்ராயணக் காலம் என்று அழைப்பார்கள். சூரிய வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாகி, பங்குனி, சித்திரை மாதங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். 
வெயில்
சூரியன் தன் கதிர்க்கரங்களை நேரடியாக நீட்டும் காலம் வெயில் காலம். கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. 
உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல் போனால், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு, அதீத வியர்வை போன்றவற்றால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வெயில் காலத்துக்கு ஏற்ற உணவுகளை நாம் தேர்வு செய்து சாப்பிட வேண்டும். 
உடலின் வெப்பம் அதிகரிக்கும்போது, உடலில் உள்ள நீர்த்தன்மைதான் முதலில் வற்றுகிறது. இதுதான் எல்லா அசௌகரியங்களுக்கும் நம்மை இட்டுச்செல்கின்றது. நமது உடலின் வெப்பத்தன்மையை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலம் சரிசெய்யலாம். 

உடல் வெப்பத்தைக் குறைக்கும் உணவுகள்... 
மண் பானை குடிநீர் : இதை அருந்தினால், உடல் வேகமாக நீரேற்றம் கொள்ளும். இதனால் ரத்தம் தடையின்றி ரத்தக்குழாய்களில் பாயும். நமக்குச் சோர்வு நீங்கி சுறுசுறுப்புப் பெருகும். 
லெமன் ஜூஸ் : தினமும் லெமன் ஜூஸ் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. வெப்பம் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கி நம் உடலைக் குளிர்வித்து உற்சாகமடையச் செய்கிறது. கூடவே சிறந்த கிருமிநாசினியாகவும் செயல்படுகின்றது. ஒருநாளைக்கு இரண்டு கிளாஸ் வரை அருந்தலாம். 
புதினா : சுத்தம் செய்த புதினாவை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் 15 முதல் 20 நிமிடம் கொதிக்கவைத்து குடித்தால், உடல் வெப்பம் நீங்குவதுடன் வாந்தி, மயக்கத்தையும் போக்கும். 
வெயில் - உணவு கட்டுப்பாடு
தர்பூசணி : அதிக நீர்த்தன்மை கொண்ட இந்தப் பழம் உடலின் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலின் நச்சத்தன்மையைப் போக்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்தது. இதை ஜூஸாகவோ சாலடாகவோ சாப்பிடலாம். 
சோற்றுக்கற்றாழை : அதிகக் குளிர்ச்சியான இந்தக் கற்றாழையின் சதைப் பகுதியை வீட்டிலேயே ஜூஸாக்கி அருந்தலாம். ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த ஜெல்லை 20 நிமிடம் முகத்தில் பூசி, பின் குளிர்ந்த நீரீல் குளித்தால் உஷ்ணத்திலிருந்து தப்பிக்கலாம். முகத்தில், கழுத்துப்பகுதியில் தோன்றும் பரு, வியர்க்குரு ஆகியவற்றிலிருந்து தப்பிக்கலாம். 
நெல்லி : வைட்டமின் 'சி' நிறைந்துள்ள இதன் ஜூஸடன் 4 பங்கு நீர் சேர்த்து, உப்பு அல்லது தேன் சேர்த்து அருந்தலாம். வெறும் வயிற்றில் அருந்துவது இன்னும் சிறப்பு. 
நீர்மோர் : தயிரைக் கடைந்து நீர் சேர்த்து, சிறிதளவு லெமன் ஜூஸ் சேர்த்து அருந்தலாம். 
காய்கறிகள் : வெள்ளரி, தக்காளி, நுங்கு, பதனீர், ஆரஞ்சு, திராட்சைப் பழங்கள் போன்றவையும் வெப்பத்தைத் தடுக்கவல்லன. நீர்க்காய்கறிகளான பூசணி, பீர்க்கன், சுரைக்காய் , முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் தயிர் பச்சடி தயாரித்துச் சாப்பிடலாம். 
வெயில் - சருமத்துக்கான ஸ்பெஷல் பேக்
சருமத்துக்கான ஸ்பெஷல் பேக் 
பாலில் குழைத்த சந்தனம் அல்லது கற்றாழை ஜெல் இவற்றை முகத்தில் பூசி, 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, குளிர்ந்த நீரில் கழுவவும். 
விரல்களில் மருதாணி வைத்துக்கொள்வதால் உடல் வெப்பத்தைக் குறைக்கும். 
வெள்ளரி, தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் பூசி இருபது நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். 
தர்பூசணி பழத்துண்டுகளோடு புதினா இலைகளைச் சேர்த்து அரைக்கவேண்டும். இந்தக் கலவையை முகம், கை, கால்களில் பூசி வர வெயிலால் பாதித்த சருமம் புத்துயிர் பெறும். 
வெயில் - ஆரஞ்சு ஸ்மூத்தி
சிம்பிள் ரெசிப்பிகள்... 
தக்காளி - வெள்ளரி சாலட் 
தேவையானவை: தக்காளி - 4, வெள்ளரி - 2, ஆலிவ் ஆயில் - சிறிதளவு, லெமன் ஜூஸ் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: தக்காளியையும் வெள்ளரியையும் கழுவி சுத்தப்படுத்தியபின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை இதனுடன் கலந்துப் பரிமாறவும். இதைச் சாலடாகவும், சாண்ட்விச் ஸ்டஃபிங்காகவும் பயன்படுத்தலாம். 
ஆரஞ்சு – வாழை ஸ்மூத்தி 
தேவையானவை: வாழைப்பழம் - 2, ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப், தோலுரித்த பாதாம் பருப்பு - 15, துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன். 
செய்முறை: பாதாமை முதலில் அரைத்துக்கொண்டு, பின் மற்ற எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். உடனே சாப்பிட ரெடி! 

நன்றி.விகடன்...

Saturday, May 27, 2017

சட்டை பட்டன் ஏன் பெண்களுக்கு இடதுபக்கமும் ஆண்களுக்கு வலதுபக்கமும் இருக்கு?... தெரியுமா உங்களுக்கு....


அப்படி ஒரு விஷயம் தான் நாம் தினமும் அணிகிற சட்டையில் உள்ள பட்டன். அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா என்று தெரியாது. நாம் தினமும் அணியும் சட்டையில் ஆண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன் வலதுபுறமாகவும் பெண்கள் அணியும் சட்டையில் உள்ள பட்டன்கள் இடதுபுறமாகவும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும்.


அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க...

விக்டோரியா மகாராணி காலத்திலேயே ஆண், பெண் இருவருமே சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. குறிப்பாக, பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் பட்டன் வைத்த சட்டையை அதிகம் அணிந்தனர்.

ஆரம்ப காலத்தில் அவர்கள் அணியும் சட்டையில் பின்புறத்தில் தான் பெரிதும் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. அவர்களுடைய வீடுகளில் உள்ள பணிப்பெண்கள் தான் அவர்களுக்கு பட்டன் போட்டுவிடுவார்கள்.

அவ்வாறு பட்டன் போட்டுவிடும்போது, பெண்களுக்கு வலதுபக்கம் கையிலிருந்து இடப்பக்க பட்டன் ஓட்டையில் மாட்டிவிடுவார்கள். இந்தமுறையே பட்டன் போடுவதற்கு மிக சுலபமாக இருந்ததால் அதுவே தொடர்ந்து பழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

ஆண்களுடைய சட்டையைப் பெரும்பாலும் அவர்களே அணிந்து கொள்வதால் அவர்களுக்கு வலது புறத்தில் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டது. 

Friday, May 26, 2017

வாழ்வில் முன்னேற.

நீ வாழ்வில் முன்னேற
வேண்டுமெனில் உன்னுடைய
கால்களால் நடந்து போ
மற்றவா்களின்  முதுகில் ஏறி போகாதே .

பாலம்

ஆற்றின் குறுக்கே பாலம் கட்டாத காலத்தில், தண்ணீர் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.

    பாலம் கட்டிய பிறகு வாகனங்கள் மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது..! 

வாழ்த்துக்கவிதை

வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்!

வாழ்த்துக்கள்
வாழ்க்கையின்
ஜீவநாடிகள்!
வாழ்த்துவோரும்
வாழ்த்தப்படுவோரும்!
நன்மை கொள்வதென்னவோ!
கோடி!
வாழ்த்தின் மேன்மை அறிந்து!
இயற்கையைப் போற்றுவோம்!
தாய்தந்தை போற்று வோம்!
நம்மை நாமே!
வாழ்த்திக்கொள்வோம்!
நம் எண்ணங்கள்
ஏகாந்தம் பெற!
இன்னலில்லா!
வாழ்வுதனை
பெற்று இன்பம்
சேர்த்து!
ஈகை பாராட்டி!
போற்றுதலோடு
வாழ்த்துப் பெற்று!
அகம் மகிழ்ந்து!
ஆனந்தம் பாடி!
இன்பத்தோடு
ஈகை உள்ளத்தோடு!
ஊன்றுகோலாய்
எவ்வேலையிலும்!
ஏற்றம் கண்டு!
ஐயம் தெளிந்து!
ஒலிஒளியாய்!
ஓதுதலில் வெற்றிக்கொண்டு!
ஔதடமே! இல்லா
அஃதொரு
வாழும் பாதை
அமைத்து!
வாழ்த்துக்கள் பலவற்றோடு!
குருநெறியில்
வாழ்ந்திட!
வாழ்வின் நோக்கம்!
விளங்கிடுமே!

Monday, April 17, 2017

நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி செய்வது எப்படி?

விதையளவு

ஒரு ஹெக்டேர் நடவுக்கு நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால ரகம் என்றால் 60 கிலோ போதும்.




விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊறவைத்து வடிகட்ட வேண்டும். இதன் மூலம், இளம் வயதில் பாதிக்கும் தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாள்வரை பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஊறவைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோணிச் சாக்கில் கட்டி 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை கட்டியதும் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்கலாம்.
சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கரைசல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி மேற்சொன்ன முறையில் விதைக்கலாம்.

நாற்றங்கால் தயாரிப்பு

தயாரிக்கப்பட்ட நிலம் 2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செமீ (ஓரடி) இடைவெளியுள்ள வாய்க்கால் பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும். பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரை நிலத்தின் சமன் அமைப்பு, மண்ணின் தன்மையைப் பொறுத்து அமைக்கலாம். வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம்.
விதைப்பு
முளைகட்டிய விதையை பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1 - 2 செமீ அளவு இருத்தல் நல்லது.
நீர் நிர்வாகம்
விதைத்த 24 மணி நேரத்துக்குள் தண்ணீரை வடித்து, விதை முளைக்க சந்தர்ப்பம் தர வேண்டும். தண்ணீர் தேங்காதவாறு பாத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் இருக்க வேண்டும்.
விதைத்த 3 முதல் 5 நாள்வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்க்க வேண்டியது அவசியம். நீரின் உயரம் 5 நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சியைப் பொறுத்து உயர்த்தலாம். அதிகபட்சமாக (ஓரங்குல ஆழம்) நீர் கட்டுவது சாலச் சிறந்தது.

களை நிர்வாகம்




விதைத்த 3 அல்லது 4ஆம் நாளில் களை முளைப்புக்கு முந்தைய களைக்கொல்லி பிரிடில்லாகளோர், சேஃப்பனர் 0.3 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேர் நாற்றுகளுக்குத் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும் முன்னர் சிறிதளவு தண்ணீர் நிறுத்த வேண்டும்.
தேக்கப்பட்ட நீரை வடிக்கக் கூடாது. தானாகவே மண்ணில் மறைதல் சிறந்தது. விதைத்த 8 நாளுக்குப் பிறகு ஈரப்பதம் இருக்கும் நிலையில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும்.
உர நிர்வாகம்
20 சென்டுக்கு 1 டன் தொழு உரம், மாட்டு எரு தேவைப்படும். கடைசி உழவின்போது 20 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இட வேண்டும். அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு உகந்தது.
நாற்றுகளை 25 நாள்களுக்குப் பின்னர் எடுத்து நட வேண்டிய நேரங்களில், ரசாயன உரங்களை இட்டு, அதிகபட்சம் 10 நாள்களுக்குள் நாற்றுகள் எடுத்து நட வேண்டும். மிக அதிகமான களிமண் பூமிகளில் நாற்றுகள் எடுக்கும் நேரத்தில் வேர் அழுகும் நிலை ஏற்படின், விதைத்த 10ஆம் நாள் சென்டுக்கு 4 கிலோ ஜிப்சம், 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.
புழுதி நாற்றங்கால்
ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம். நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு, விதை நேர்த்தி ஆகியவை சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிட்டதைப்போல பின்பற்ற வேண்டும். நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகல பாத்திகளாக அமைக்க வேண்டும். பாத்தியைச் சுற்றிலும் ஓரடி அகல வாய்க்கால் அமைப்பது நல்லது.
களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுப்பாத்திகள் அமைக்கலாம். மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்திகள் போதும்.
நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைகள் தூவப்பட்டு நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தால் விதைகள் மூடப்பட வேண்டும். மண் நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும். நான்கு இலைப் பருவம் நடவுக்கு ஏற்றது.
ரசாயன உரமிடுதல்: மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும். இறவை நெற்பயிருக்கு குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் மணிச்சத்து, சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும். மண் பரிசோதனை மூலம் உரங்கள் அளிக்க நேரமில்லையெனில் பொதுவான பரிந்துரைகளைப் பின்பற்றலாம்.

நீர் மேலாண்மை

சேற்று உழவும், உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன.
இரும்புச் சக்கரக் கலப்பை மூலம் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20 சதவீதம் வரை தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஒரு அங்குல நீர் நிறுத்த வேண்டும்.
குறைவான நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவைகளுக்கு 7 நாளும், அதிகம் நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாளும் நீர் நிறுத்திய பின்னரே நடவேண்டும்.
நடவு செய்யும்போது தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது. இவ்வாறு அமைந்தால் சரியான ஆழத்தில் நடவும். அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். நட்ட ஒரு வாரத்துக்கு ஓரங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும்.
இது தூர் பச்சை பிடிக்கும் காலமானதால் நீர் அளவு குறையாமல் பராமரிக்க வேண்டும். பச்சை பிடித்த பின்பு 2 அங்குல ஆழத்துக்கு நீர் கட்டி, கட்டிய நீர் மறைந்து நூலளவு மண்வெடிப்பு தோன்றும்போது மீண்டும் நீர் கட்டுதல் வேண்டும். இம்முறையில் நீர் கட்டுதல் பயிர் முதிர்ச்சியடையும்வரை கடைப்பிடிக்கவேண்டும்.

அறுவடை

நடவு செய்யப்பட்ட ரகத்தின் வயதைப் பொறுத்து அறுவடை காலத்துக்கு 7 நாள்கள் முன்பாக நீர் தேங்கி நிற்காமல் பாரத்துக்கொள்வது நல்லது. 80 சதம் கதிர்மணிகள் முற்றிய பின்பும்கூட வயலில் பச்சை இலைகளின் தோற்றம் காணப்படும்.
எனவே, கதிர் முதிர்ச்சியடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக கதிரின் அடிப்பாகத்தில் உள்ள நெல்மணிகளை கை விரல்களால் அழுத்திப்பார்த்து முதிர்ச்சியை முடிவு செய்யலாம்.
மணிகளை அழுத்தும்போது கடினமாகவும் பால் வெளியில் வராமலும் இருந்தால் அறுவடைக்குத் தயார் என அர்த்தம்.
அறுவடையை 3 நாள் முன்கூட்டி செய்ய வேண்டியநிலை ஏற்படும்போது, சாப்பாட்டு உப்புக்கரைசல் 20 சதவீதம் என்ற அளவில் இலைகளில் தெளித்து 48 மணி நேரத்துக்குப் பின் அறுவடை செய்யலாம்.