முகப்பு
சுற்றுச்சூழல்
மக்கள் நலம்
விவசாயம்
கவிதைகள்
Tuesday, January 29, 2013
மலர்
பூவின் மொட்டுக்கள் போல
மௌனமாக இருக்காமல்...
மலர்ந்த பூக்கள் போல
எப்போதும்
சிரித்துக் கொண்டே இருங்கள்...!
மலர்கள்
காலை முதல் மாலை வரை சிரித்தேன்...!
பரிசாக கிடைத்தது
மரண தண்டனை...
-இப்படிக்கு மலர்கள்.
மீனவன்
மீன் சாப்பிடக்கூடாது
என்றிருந்தேன்...
இப்போது சாப்பிடுகிறேன்
மீனவன் சாப்பிடுவதற்காக...
முடியாது...
காரணம் இல்லாமல்
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது...
முடிவு
யோசனை யாரிடம்
வேண்டுமானாலும் கேள்...!
ஆனால்...
முடிவை நீ மட்டும் எ
டு .
முயற்சி
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல ,
நீ நினைத்ததை
முடிக்கும் வரை ...
மொழிகள்
தமிழ் முதல்
சீனம் வரை
பல மொழிகள் புரிகிறது...
உன் விழிகள் பேசும்
வார்த்தை மட்டும்
புரியவில்லை...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)