Thursday, October 27, 2016

நீங்கா நினைவுகள்......




மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவுகள்
கண்விழித்ததும் அம்மாவைத் தேடும் மழலை வயது நாட்கள்.........
காசு கேட்டு அம்மாவின் புடவையைத் தொங்கிய நாட்கள்..........
கிடைக்கும் சில்லரை காசுக்காக ஒரு மைல் தூரமாயினும் கடைக்கு சென்ற நாட்கள்.......
திண்பண்டங்களை சகோதர சகோதரியிடமிருந்து பதிக்கிய பின் பறித்து திண்ற நாட்கள்....
அர்த்தம் புரியாமல் வெறும் இசைக்காக பாடல்களை முனுமுனுத்த நாட்கள்.....
எச்சில் தொட்டு ஏடு அழிக்கும் சிக்கனம் பழகிய நாட்கள்.......
முடிக்காத வீட்டுப்பாடத்தை நண்பர்களிடமிருந்து copy paste செய்த நாட்கள்........
படித்தே இருந்தாலும் படிக்கவில்லை என்று நண்பனிடம் பொய் சொன்ன நாட்கள்........
பத்துநாள் கழித்து வரும் பண்டிகை விடுமுறையை ஆவலுடன் எதிர்த்த பார்த்த நாட்கள்.......
அடித்த மணியோசை அடங்கும் முன் வீட்டில் காலடி பதித்த விளையாட்டுப் பருவ நாட்கள்....
விடுமுறை நாட்களில் விடியும் முன் விழித்த நாட்கள்..
பயந்து வாழ்ந்த பள்ளி நாட்கள்.....
பெற்றோரை பயக்க வைத்த பருவ நாட்கள்...
வெட்டியாய் திறிந்த விலைமதிப்பில்லா நாட்கள்....
சுட்டியாய் திறிந்த சுதந்திர நாட்கள்....
எத்தனையோ நாட்கள் போனாலும் 
இப்படி நிகழ்ந்த இனிய நாட்கள் .....
இதயத்தை விட்டு நீங்காமல் இருப்பது,  ஏனோ.....

Wednesday, October 26, 2016

என்றுமே அழகு...




தெரியாதக் காற்றும்...
புரியாதக் கவிதையும்...
சொல்லாதக் காதலும்...
கலையாதக் கனவும்...
என்றுமே அழகு தான்...!

Monday, October 24, 2016

உணர்வு

நாம் வாழும் வரை
நம்மை யாரும் வெறுக்க கூடாது!

நாம் வாழ்ந்து முடிந்த பின்பு
நம்மை யாரும் மறக்க கூடாது!!

நிம்மதி

உலகில்
நிம்மதியாக
வாழ ஒரே வழி!

யாரையும்
நேசிக்காமல்
இருப்பது தான்!!

அன்பு

அன்பு
கிடைத்தவர்களுக்கு
தெரியாது!

கிடைக்காதவர்களுக்கு
புரியாது!

தொலைத்தவர்களுக்குத்தான்
தெரியும்
அதன் அருமை!

இழப்பு

இழக்க
விரும்பாவிட்டாலும்!

இழந்து தான்
ஆக வேண்டி
இருக்கிறது சிலவற்றை
வாழ்வில்!!

அன்பு


தகுதி அற்றவர்களிடம்
நீ வைக்கும் அன்பு

தயக்கம் இன்றி
உன்னை தவிக்க விட்டு
செல்லும்!