Wednesday, September 25, 2013

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை பெறலாம்.

ஆன்லைன் மூலம் சாதி, இருப்பிடம்,வருமானச் 

சான்றிதல்களை பெறலாம்.




சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி

 ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு 

இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் 

நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை 

நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் 

சான்றிதல், இருப்பிடச் சான்றிதல்,வருமானச் 

சான்றிதல், No Graduate போன்றச் சான்றிதல்களை 

பெற முடியும்.

இணைய முகவரி: http://edistrict.tn.gov.in

Wednesday, August 28, 2013

ஆதாலால் மரங்களை வெட்டாதீர்....





நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவர்கள் நாம்...

மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நாம் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன தற்கால குழந்தைகள்!!

கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!

வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறோம் நாம்..

மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!


நானும் மரம் தான் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!

அதனால்தான்  நானும் மரம்
ஆகத்தான் ஆசைப்படுகிறேன்..

ஆதாலால் மரங்களை வெட்டாதீர்கள்..

Tuesday, August 13, 2013

குடும்ப அட்டை பற்றிய புகார்களுக்கு

ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே 

யாரையும் ஏமாத்தமுடியாது இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் 

படிக்கதேரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க நண்பர்களே....





ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். 


காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ 

அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று 

சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய 


சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)


என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக


PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 


9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் 

கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) 


மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக்

 கொண்டுமாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள 


முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய 

வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். 


உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை 

(வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை 

எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் 

கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு 


ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக 

பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sunday, July 21, 2013

கீரைகளின் ராஜா - பொன்னாங்காணி.







கீரைகளின் ராஜா என்று அனைவரும் அழைக்கும் கீரை பொன்னாங்காணி.

அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது இக்கீரை …

சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்தசூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இதில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் அடங்கிய கீரை.

பொன்னாங்காணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவைப்பார்க்கலாம் என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவும் கீரை.

பொன்னாங்காணியில் சீமை பொன்னாங்காணி என்றும், நாட்டுப் பொன்னாங்காணி எனவும் இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணி தான் பல அருங்குணங்கள் கொண்டது.

உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

பொன்னாங்காணியின் பயன்கள் :

இக்கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
கீழா நெல்லிச்சாற்றைக் கலந்து நல்லெண்ணெய் இட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் கண் நோய்கள் விலகும்.
சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.

உடலை, தோலைப் பளபள என்று மாற்றுவதில் பெரும்பங்குண்டு.
மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

இன்று நாம் உண்ணும் உணவிலும் சுவாசிக்கும் காற்றிலும் இரசாயனம் கலந்திருப்பதால் அவை இரத்தத்தில் நேரடியாக கலந்துவிடுகின்றன. இதனால் இரத்தம் அசுத்தமடைகின்றது.

பொன்னாங்காணிக் கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்காணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்காணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து – 20 கிராம், அருகம்புல் காய்ந்தது – 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது – 10 கிராம் எடுத்து 1/2லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

பொன்னாங்காணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.மேனியை பளபளக்கச் செய்யும். நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும்.

பொன்னாங்காணி இலைச்சாறு, நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அத்துடன் அதிமதுரம், கோசுடம், செங்கழு நீர்க்கிழங்கு, கருஞ்சீரகம் வகைக்கு 20 கிராம் எடுத்து பாலில் அரைத்துப் போட்டு சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 4 நாளுக்கு ஒருமுறை தலைக்குக் குளித்து வர உட்காய்ச்சல், உடல்சூடு, கைகால் உடல் எரிச்சல், மண்டைக் கொதிப்பு, கண் எரிச்சல், உடம்புவலி, வயிற்றுவலி குணமாகும்.

பொன்னாங்காணி வேர் ஒரு எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து அரைத்து எருமைப்பால் 2 படியில் கலக்கிக் காய்ச்சி தயிராக்கிக் கடைந்து எடுத்த வெண்ணெயை 3 நாள் காலையில் சாப்பிட்டு மோரையும் தாகத்துக்குக் குடித்துவர இரத்தம் கலந்து சிறுநீர் போகுதல் குணமாகும்.

உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை, குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை விந்து கட்டி எனப் பேசுகிறது.

இந்தக் கீரை வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். பலன்கள் கிடைக்க தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.

ஒரு நாள், இரண்டு நாள் சாப்பிட்டு விட்டு நிறுத்தினால் முழுப்பலன் கிடைக்காது.

குறைந்தது 12 மாதம் முதல் 213 மாத காலம் எந்த மூலிகைக்கும் தேவை.

Wednesday, July 10, 2013

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !

















உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !


உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....

அழுத்துங்கள்-


Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#



Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#


Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#


Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#


Airtel சேவையைப் பயன்படுத்துபவர்க
ள் *121*9#

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#


Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#


Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#


Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

Friday, June 28, 2013

கவனிக்க படாத எளிய மனுஷி..






கவனிக்க படாத எளிய மனுஷி

காங்கயம் அருகே வட்டமலை கோவிலில் துப்புறவு பணியில் இருக்கும் இந்த பெண் 1944 ல் இக்கோவில் திருப்பணி நடந்த போது 7வயது சிறுமியாக இங்கே வந்தது.

இன்று வரை இங்கே இறைபணியும் கோவில் நிலத்தில் மரம் வளர்க்கும் சமூக சேவையும் தவறாமல் செய்து வருகிறார் .படித்து சமூக ஊடகங்களில் பசுமை ஆர்வலர்களாக இருக்கும் நம்மைவிட மரம் வளர்ப்பதில் மிகுந்த அக்கறை உடையவர்.களப்பணியாற்றும் இது போண்றவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது எண்ன?



மலை மீது நின்று தான் வளர்த்த மரங்களை பெருமையுடன் என்னிடம் அவர் காட்டிய போது அவர் முகத்தில் ஒரு பெருமிதம்

அவர் பிறப்பு அர்த்தம் பெற்றது

நம்பிறப்பு ??



செகன் நாதன்